Kevin Williamson உருவாக்கியுள்ள சீரிஸ் `The Waterfront'. மீன்பிடி தொழிலை மிகப்பெரிய சாம்ராஜ்யமாக நடத்தும் ஒரு நிறுவனத்தின் கதை.
அஹமத் கபீர் இயக்கி 2023ல் வெளியான Kerala Crime Files சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. இந்த முறை என்ன குற்றம் நடக்கிறது, அதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை.
Ravi Chhabriya இயக்கத்தில் Diljit Dosanjh நடித்துள்ள படம் `Detective Sherdil'. ஒரு குற்றத்தை விசாரிக்க செல்லும் ஆர்வக்கோளாறு டிடெக்டிவின் கதை.
டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ் நடித்த படம் `ஜின்'. வாழ்க்கையில் ஆசைப்பட்டதெல்லாம் நடக்க மாந்திரிகத்தை தேர்ந்தெடுக்கும் இளைஞனுக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.
பின்டோ ஸ்டீஃபன் இயக்கத்தில் திலீப், தியான ஸ்ரீனிவாசன் நடித்த படம் `Prince and Family'. குடும்பத்தில் தன் ஒருவனுக்கே திருமணம் ஆகவில்லை என்ற கவலையில் இருக்கும் பிரின்ஸ் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே கதை.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடித்துள்ள படம் `குபேரா'. பணத்தால் ஏற்படும் விஷயங்கள், விளைவுகள் பற்றிய படம்.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா நடித்துள்ள படம் `DNA'. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது
விக்ரம் - அருண் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் `சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்'. வங்கி கொள்ளையை மையமாக கொண்டிருக்கும் காமெடி படம்.
பனிந்த்ரா நரஷெட்டி இயக்கியுள்ள படம் `8 Vasantalu'. எட்டு வருட காதல் பயணமே கதை.
விபின் இயக்கத்தில் அனஸ்வரா நடித்துள்ள படம் `Vyasana Sametham Bandhu Mithradhikal'. ஒரு சாவு வீட்டில் நிகழும் சம்பவங்களே கதை.
அனு வைகா இயக்கிய படம் `United Kingdom of Kerala'. டோனி வெளிநாடு செல்லும் கனவுடன் இருக்கிறார். ஆனால் அந்த முடிவை அவர் மாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கியுள்ள படம் `Sitaare Zameen Par'. 2018ல் வெளியான Champions ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் இது. குடித்துவிட்டு விபத்து நிகழ்த்திய குல்ஷனுக்கு நீதிமன்றம் தண்டனையாக ஒரு பொறுப்பை வழங்குகிறது. குழு ஒன்றிற்கு கூடைப்பந்து பயிற்சி அளிக்க வேண்டும். அது என்ன குழு என்பதும், அதன் பின் என்ன நடக்கிறது என்பதை நெகிழ்ச்சியாக சொல்லும் கதை.
Adrian Molina இயக்கியுள்ள படம் `Elio'. விண்வெளி மீது அதீத ஆர்வம் கொண்ட சிறுவன் எலியோ ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து எப்படி தப்பினான் என்பதே கதை.
Danny Boyle இயக்கியுள்ள படம் `28 Years Later'. 28 Days Later மற்றும் 28 Weeks Later படங்களின் சீக்குவலாக உருவாகியுள்ளது படம். வைரல் பாதிப்பு ஒன்றால் பாதிக்கப்படும் தீவை பற்றிய கதை.
Wes Anderson இயக்கத்தில் Benicio Del Toro நடித்துள்ள படம் `The Phoenician Scheme'. Zsa-zsa Korda தனது மகளை தொழில் வாரிசாக மாற்றிய பின் என்ன நடக்கிறது என்பதே கதை.