சினிமா
லிங்குசாமி படத்தில் இணைந்த ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி
லிங்குசாமி படத்தில் இணைந்த ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி
இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் இயக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது தமிழ், தெலுங்கில் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கவிருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்பொத்தேனி நடிக்கும், இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி இணைந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘உப்பெனா’ படம் கொரோனா சூழலிலும் 100 கோடிக்குமேல் வசூல் சாதனை படைத்தது. இதில், ஹீரோயினாக நடித்த கீர்த்தி ஷெட்டி நடிப்பில் கவனம் ஈர்த்தார். இவரின் அடுத்தப்படம் எப்போது என்று எதிர்பார்த்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக லிங்குசாமி படத்தில் இணைந்திருப்பதை அறிவித்திருக்கிறது படக்குழு.