கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேருவீர்களா?: கோவை சரளா ஜாலி பேட்டி

கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேருவீர்களா?: கோவை சரளா ஜாலி பேட்டி

கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேருவீர்களா?: கோவை சரளா ஜாலி பேட்டி
Published on

இட்லி படத்திற்கான புரமோஷனில் நடிகை கோவை சரளா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கமல் ஆரம்பிக்க போகும் கட்சியில் நீங்கள் சேருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

அப்பு மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இட்லி. அதனை வித்யாதரன் இயக்க இருக்கிறார். அப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கோவை சரளா, சரண்யா பொன்வண்ணன் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் வருமாறு:

உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
கோவை சரளா: எனக்கு நானே குழந்தை. 

உடன் அமர்ந்திருந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் காமெடியாக ‘இராமசந்திரா மருத்துவக் கல்லூரியில் சரளா அம்மாவின் இரண்டு பெண் குழந்தைகளுமே மருத்துவம் படிக்கிறார்கள். பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படித்து வருகிறார்கள்’ என்று கிண்டலடித்தார். (உண்மையில் கோவை சரளாவுக்கு திருமணமே ஆகவில்லை. அதைத்தான் கிண்டலாக சரண்யா கூறியிருக்கிறார்.) 

கமல்ஹாசன் தனிக் கட்சி ஆரமித்தால் அவருடன் நடித்த கதாநாயகிகள் எல்லோரும் கட்சியில் சேர்வார்களா?
கோவை சரளா: அது எனக்கு தெரியாது. இன்று என்ன நடக்கும் என்பதே நமக்கு தெரிவதில்லை அப்படி இருக்கும்போது நாளை என்ன என்பது மட்டும் எப்படி சொல்ல முடியும்?

இட்லி  படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க?

சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதா நாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம். அப்படி தற்போது வந்த படம் மகளிர் மட்டும். அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள். அதுபோலத்தான் இந்த இட்லி படமும். கதைக்கு தேவை என்பதால் எங்களை சேர்த்தார்கள். இந்த மாதிரி கதைகளுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

நீங்கள் மூன்றுபேரும் இப்படத்தில் தோழிகளா இல்லை யதார்த்தமாக சந்திப்பீர்களா?
சரண்யா பொன்வண்ணன்: ஆரம்பத்தில் இருந்தே தோழிகளாக வருவோம்.

ஏதோ தனியா வேஷம்லாம் போட்டிருக்கிங்களாமே?
கோவை சரளா: ரொம்ப பெருசாலாம் இல்ல ஓரளவுக்கு போட்டிருப்பேன்.

சரண்யா பொன்வண்ணன்: என்னைப் பொறுத்தவரை அது பெருசுதான். பேன்ட் சர்ட், ஜீன்ஸ்லாம் நான் போட்டதே இல்ல. முதலில் விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டேன் அவர்கள் கதைக்கு தேவைபட்டால் அதை பண்ணலாம் என்று சொன்னார்கள். இயக்குநர் அளித்த நம்பிக்கையில் நடித்தேன்

நீங்க மட்டுமா இல்லை அனைவருக்கும் அதே உடையா?
சரண்யா பொன்வண்ணன்: எல்லோருக்கும் அதே உடை அதுதான் ஆறுதலாக இருந்தது.
கோவைசரளா: ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம். எங்களுக்கு ஒரு லவ் ட்ராக் இருக்கு. அது மிக வித்தியாசமான ஒன்று. அதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

உங்களோடு நடித்துள்ள வெண்ணிற ஆடை மூர்த்தி சார் பற்றி சொல்லுங்க?
கோவை சரளா: அவர் பெரிய லெஜன்ட். அப்போ என்ன வம்பு பண்ணுவாறோ அது இப்பவரை இருக்குது.
சரண்யா பொன்வண்ணன் : இதில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அதான் இந்தப் படத்தின் ப்ளஸ். எல்லரும் அவங்க பங்க சிறப்பா பண்ணியிருக்காங்க..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com