ரிலீஸ் தேதியுடன் வெளியான கோவை சரளாவின் ‘செம்பி’ பட புதிய ட்ரெய்லர்!

ரிலீஸ் தேதியுடன் வெளியான கோவை சரளாவின் ‘செம்பி’ பட புதிய ட்ரெய்லர்!

ரிலீஸ் தேதியுடன் வெளியான கோவை சரளாவின் ‘செம்பி’ பட புதிய ட்ரெய்லர்!
Published on

‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘மைனா’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்து பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டு வருகிறார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன்.

கொடைக்கானலில் இருந்து 24 பயணிகளுடன் திண்டுக்கல் வரை செல்லும் பேருந்து ஒன்றில், வழியில் நடக்கும் சம்பவங்களே கதைக்களமாக இந்தப் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக 1985-ம் ஆண்டு மாடல் கொண்ட பழையப் பேருந்து ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜூன் மாதம் செல்வராகவனால் வெளியிடப்பட்ட நிலையில், இந்தப் படம் வருகிற 30-ம் தேதி வெளியாவதை முன்னிட்டு இன்று புதிய ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com