’இனி சினிமாவே வேண்டாம்’ என்ற பிரியாவின் முடிவை மாற்றிய படம்!

’இனி சினிமாவே வேண்டாம்’ என்ற பிரியாவின் முடிவை மாற்றிய படம்!

’இனி சினிமாவே வேண்டாம்’ என்ற பிரியாவின் முடிவை மாற்றிய படம்!
Published on

பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள படம், ‘கூட்டத்தில் ஒருத்தன்’.  அசோக் செல்வன், பிரியா ஆனந்த்
ஜோடியாக நடித்துள்ளனர். படம் பற்றி பிரியா ஆனந்த் கூறும்போது, நான் இந்த படத்தின் கதையை கேட்கும் முன், எந்த படத்திலும் இனி நடிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். என் மனநிலை இருந்தது. ’கூட்டத்தில் ஒருத்தன்’ கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவ்வளவு பாஸிடிவான கதை இது. மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம்’ என்றார்.

ஹீரோ அசோக் செல்வன் கூறும்போது, ‘ இது என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம். ’மிடில் பெஞ்சர்’களின் கதை. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை என் அப்பா பார்த்தார். அதில் இருப்பது நான் தான் என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் படப்பிடிப்பு ஒரு கல்லூரியில் நடைபெற்றது. கேரவனில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் கல்லூரிக்குள் நுழைய முயன்றேன். வாட்ச்மேன், என்னை விடவில்லை. ’உள்ளே ஷூட்டிங் நடக்கிறது, அங்கே செல்ல கூடாது’ என்றார். பின் படக்குழுவினர் வந்து, இவர் தான் படத்தின் ஹீரோ என்று சொல்லி அழைத்து சென்றனர். இதை நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இப்போது நிலவி வரும்
குழப்பமான சூழ்நிலையில் கூட்டத்தில் ஒருத்தன் மிகவும் பாசிடிவான திரைப்படமாக இருக்கும்’ என்றார் அசோக் செல்வன்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com