இங்க வந்து மேரேஜ் பண்ணுங்களேன்: கோலி, அனுஷ்காவுக்கு ஆஸி. அழைப்பு!

இங்க வந்து மேரேஜ் பண்ணுங்களேன்: கோலி, அனுஷ்காவுக்கு ஆஸி. அழைப்பு!

இங்க வந்து மேரேஜ் பண்ணுங்களேன்: கோலி, அனுஷ்காவுக்கு ஆஸி. அழைப்பு!
Published on

விராத் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தங்கள் திருமணத்தை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தில் நடத்த அதன் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வரும் 12 -ம் தேதி இவர்கள் திருமணம் இத்தாலியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் திருமணம் நடைபெறலாம் என்றும், இந்திய ஊடகங்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கவே தொலைதூரத்தில் திருமணம் நடப்பதாகவும் வரும் 9 முதல் 12 ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல மும்பை பிரபலங்கள் சிலர் அந்த தேதிகளில் இத்தாலி செல்ல விமான டிக்கெட் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்ட்ரூ டேனியல்ஸ், தங்கள் ஸ்டேடியத்தில் திருமணத்தை நடத்த விராத் மற்றும் அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இந்த மைதானத்தை விராத் கோலியால் மறக்க முடியாது. இந்த மைதானத்தில் அவர் 8 இன்னிங்ஸில் விளையாடி 623 ரன்கள் பெற்றுள்ளார். டி20 போட்டியில் அவரது அதிக பட்ச ஸ்கோரான 90 ரன்களை இந்த மைதானத்தில்தான் எடுத்தார். இங்கு அவரது ஸ்டிரைக் ரேட் அபாரமாக உள்ளது. அதனால் அவர் திருமணத்தை இங்கு நடத்தலாம். இது அவருக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மைதானம் இப்போது நவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதில் திருமண ஹாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com