ரஜினிகாந்துக்கு முத்தம்... கனவை நிறைவேற்றிய டிவி நடிகை
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து டிவி நடிகை சைத்ரா ரெட்டி முத்தம் வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பொதுவாக அனைவருக்கும் ஏற்படுவது உண்டு. அதே ஆசை தெலுங்கு சேனல் ஒன்றில் நடித்து வரும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் சிறுவயதிலிருந்தே ஆர்வமாம். அதுவும் அவரை சந்திக்கும்போது ரஜினிக்கு முத்தம் வழங்க வேண்டும் என்கிற தீவிர ஆசை அவருக்கு.
இந்நிலையில் காலா படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த சைத்ரா ரெட்டி அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள சைத்ரா ரெட்டி, தனது பலநாள் கனவு நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.