பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் இன்று..!

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் இன்று..!
பாப் இசை மன்னன்  மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் இன்று..!

இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் மைக்கல் ஜாக்சன். இசை, நடனம், பேஷன் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த மாமன்னன் என்று கூட மைக்கல் ஜாக்சனை சொல்லலாம். 

பாப் இசையின் மன்னன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவருக்கு இன்று பிறந்த நாள். 

இதே நாளில் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் ஆப்ரிக்க - அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்தார் ஜாக்சன். அவரது குடும்பம் முழுவதும் இசைக் கலைஞர்களுக்கு பஞ்சமில்லை. எளிமையாக  சொன்னால் ஜாக்சனின் குடும்பம் ஒரு இசை குடும்பம். அவரது இசைப் பயணம் அங்கிருந்து தான் ஆரம்பமானது. 

1964இல் தொழில்முறை இசை பயணத்தை அண்ணன்களோடு இணைந்து ஆரம்பித்தார். 

1971இல் சோலோவாக பர்பார்ம் செய்ய களத்தில் இறங்கினார் மைக்கல் ஜாக்சன். இருப்பினும் 1979இல் வெளிவந்த ‘ஆப் தி வால்’ ஆல்பம் அவரை நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. 

பின்னர் 1982இல் வெளிவந்த திரில்லர் ஆல்பத்தில் இசை மூலம் தனது ரசிகர்களை என்டர்டெயின் செய்தது மட்டுமின்றி புரட்சியும் பேசினார். இனவெறிக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார் மைக்கல் ஜாக்சன். அந்த ஆல்பத்திற்கு எட்டு கிராமி விருதுகளும் கிடைத்திருந்தது. 

தொடர்ந்து பேட் (1987), டேஞ்சரஸ் (1991), ஹிஸ்டரி : பாஸ்ட், பிரசன்ட், பியூச்சர், புக் 1 (1995), இன்வின்சிபிள் (2001) மாதிரியான ஆல்பம் மூலமாக தெறிக்கவிட்டார் மைக்கல் ஜாக்சன்.

‘மூன் வாக்’ மூவ்மெண்ட் மூலமாக பார்வையாளர்களை மெஸ்மெரிக்க செய்யும் கலைஞர். 

லைவ் கான்சர்ட் மூலம் ரசிகர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் கொடுத்து வந்தார். அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றிருந்தார். 

அதே நேரத்தில் அவரது வாழ்வில் புகழுக்கு எந்தளவு இடமிருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்தன. அவரது தோற்றத்தில் அவர் மேகொண்ட மாற்றங்கள், வாழ்க்கை முறை மாதிரியான காரணங்களுக்காக அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன. 

2009இல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் மைக்கல் ஜாக்சன். 

அவர் இல்லை என்றாலும் இந்த நொடி கூட அவரது இசை ஒலியாக காற்றில் உலகின் ஏதோவொரு பகுதியில் ஒலித்துக் கொண்டிருக்கலாம்.   

ஹேப்பி பெர்த் டே...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com