‘என் மகளின் கனவு நிஜமானது’ - நடிகை குஷ்பு ட்வீட்

‘என் மகளின் கனவு நிஜமானது’ - நடிகை குஷ்பு ட்வீட்
‘என் மகளின் கனவு நிஜமானது’ - நடிகை குஷ்பு ட்வீட்

ரஜினியுடன் தனது மகள் எடுத்து கொண்ட புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் பகிந்து கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை மீனா, குஷ்பு ஆகிய இரு நடிகைகளும் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், முதன்முறையாக ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறார். குஷ்பு, இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. சில தினங்கள் முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை விருது பெற்றதை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் நடிகை குஷ்பு ‘தலைவர் 168’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் தளத்திற்கு அவரது மகள் ஆனந்திதாவும் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் ரஜினியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து கொண்டுள்ளார். மற்றும் ஆட்டோகிராஃப் வாங்கி உள்ளார். அதை குஷ்பு ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து குஷ்பு, “எனது மகளின் கனவு ஒன்று நனவானது. என் மகள் சூப்பர் ஸ்டாரை பார்த்த தருணத்தில் அவளது இதயம் துடிப்பை தவறவிட்டது. இதற்காக நேரம் ஒதுக்கி, ஆசிர்வதித்த ரஜினிக்கு நன்றி. உங்கள் எளிமை அவள் மேல் பந்து வீசியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘தலைவர்168’ படம் கிராம பின்னணியை வைத்து உருவாகி வரும் குடும்ப திரைப்படம் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்கான பூஜை ரஜினி பிறந்தநாளையொட்டி நடைபெற்றது. ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற முதன் நாள் படப்பிடிப்பில், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆனால் அதை தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

இதனிடையே ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com