சினிமா
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் அணி தரப்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த விஷால் தரப்பினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகை குஷ்பு தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தேர்தலில் எதிர்கொள்ளும் சோதனைகளைப் போராடி வெல்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு விஷால் அணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.