\
”கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்”: சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ போஸ்டர்

”கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்”: சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ போஸ்டர்

”கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்”: சஞ்சய் தத் பிறந்தநாளில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ போஸ்டர்
Published on

நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’கேஜிஎஃப் 2’ படத்தின் போஸ்டரையும், சஞ்சய் தத்தின் கதாபாத்திரப் பெயரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது படக்குழு.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இம்மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ உலகம் முழுக்க வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா என பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் இன்று தனது 62-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதனையொட்டி, இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”போர் முன்னேற்றத்துக்கானது, கழுகுகள் கூட என்னுடன் உடன்படும்” என்ற வாசகத்தை வெளியிட்டு சஞ்சய் தத், அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை #Adheera ஹேஷ்டேக்குடன் புதிய போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்.

அனைவரும் ’கேஜிஎஃப் 2’வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் இயக்குநர் பிரஷாந்த் நீலிடம் தங்களது ஏமாற்றத்தை கமெண்ட்ஸ்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com