\
சித்தார்த்துக்கு வில்லனாக ’கேஜிஎஃப்’ கருடா ராம்

சித்தார்த்துக்கு வில்லனாக ’கேஜிஎஃப்’ கருடா ராம்

சித்தார்த்துக்கு வில்லனாக ’கேஜிஎஃப்’ கருடா ராம்
Published on

நடிகர் சித்தார்த் படத்தில் வில்லனாக ’கேஜிஎஃப்’ புகழ் ராமச்சந்திர ராஜு (கருடா ராம்) நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

நடிகர் சித்தார்த் மற்றும் சர்வானந்த் நடிக்கும் ‘மஹா சமுத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் அஜய் பூபதி. இவர், இயக்குநராக அறிமுகமாகிய ‘ஆர்.எக்ஸ் 100’ படம் வெற்றி பெற்றதால் ‘மஹா சமுத்திரம்’ படமும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது. அஜித்தின் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயாதான் ‘ஆர்.எக்ஸ் 100’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இயக்குநர் அஜய் பூபதி தமிழ், தெலுங்கில் ’மஹா சமுத்திரம்’ படத்தை இயக்கி வருகிறார். அனு இமானுவேல், அதிதி ராவ் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக ‘கேஜிஃப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்கவிருக்கிறார். மிரட்டும் கெட்டப்பில் இன்று படக்குழு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது.

‘கேஜிஎஃப்’ படத்தில் ஹீரோ யஷுக்கு எப்படி பில்டப் செய்து எதிர்பார்ப்புகளை கிளப்பினார்களோ,அப்படித்தான், ’கருடா’ கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜுக்கும் பில்டப் செய்து எதிர்ப்பார்ப்பை கிளப்பினார்கள். நரபலி கொடுக்கும் கொடூர வில்லனாக நடிப்பில் பயமுறுத்தியிருந்தார் ராமசந்திர ராஜு. இதனால், ’கருடா ராம்’ என்றே திரைத்துறையினர் அழைத்து வருகிறார்கள். இவர், நடிப்பில் தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படம் வெளியானது. அதனைத்தொடர்ந்து, இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com