லோகி யுனிவர்ஸ், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ‘கேஜிஎஃப்’ படத்தை எடுக்க முடிவு? - ஹீரோ இவர் இல்லையா?

லோகி யுனிவர்ஸ், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ‘கேஜிஎஃப்’ படத்தை எடுக்க முடிவு? - ஹீரோ இவர் இல்லையா?
லோகி யுனிவர்ஸ், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ‘கேஜிஎஃப்’ படத்தை எடுக்க முடிவு? - ஹீரோ இவர் இல்லையா?

நடிகர் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்ற நிலையில், அந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம், கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கன்னட மொழி திரைப்படமான இந்தப் படத்தில் நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், ஆனந்த் நாக் உள்பட பலர் நடித்திருந்தனர். கன்னடத்தையும் தாண்டி தென்னிந்திய ரசிகர்களிடையே இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ‘கே.ஜி.எஃப் 2’, இந்திய அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது.

குறிப்பாக பாலிவுட் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இதனால், இந்தப் படம் 1,250 கோடி ரூபாய் வசூலித்து, இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியானப் படங்களில் அதிக வசூலை ஈட்டியப் படம் என்ற பெருமையையும் பெற்றது. இதையடுத்து, ‘கே.ஜி.எஃப் 3’ படத்திற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தப் படத்தை 5 பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் முறையில் வெவ்வேறு நடிகர்களை வைத்து ‘கே.ஜி.எஃப்’ படத்தின் மீதமுள்ள பாகங்களை எடுக்க படக்குழு ஆலோசனை செய்து வருகிறது. இதனால் 2025-ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கவுள்ள ‘கே.ஜி.எஃப். 3’ படத்தில் நடிகர் யஷ் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், ‘கே.ஜி.எஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும், ‘சலார்’ படத்தில் நடிகர் யஷ்ஷை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்கவுள்ளார். ஏனெனில், லோகேஷ் கனகராஜ் தனதுப் படங்களில் பயன்படுத்தும் லோகி சினிமாட்டிங் யுனிவர்ஸ் போன்று ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘சலார்’ படத்திற்கு இடையே ஒரு கனெக்ஷனை ஏற்படுத்த இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘சலார்’ படத்தில் யஷ்ஷை அவரது ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸின் ‘சலார்’ படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு இசையமைத்த ரவி பசுரூர் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் கௌடா ஆகியோர் தான் ‘சலார்’ படத்திலும் பணியாற்றுகின்றனர். ‘கே.ஜி.எஃப் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு துவங்கி, 2026-ம் ஆண்டில் வெளியாக உள்ளது. அதற்கிடையில், ஜூனியர் என்.டி.ஆரின் படம் ஒன்றையும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com