\
தடுப்பூசி செலுத்திக்கொண்ட ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல்!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல்!

தடுப்பூசி செலுத்திக்கொண்ட ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல்!
Published on

‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

”கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில், ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஃப் 2’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டு, “இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்றுக்கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘கேஜிஎஃப் 2’ வெளியாகவிருக்கிறது. அடுத்ததாக பிரபாஸின் படத்தையும், அதற்கடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com