இரட்டை சந்தோஷத்தில் ’கே.ஜி.எஃப் 2’ படக்குழு..!

இரட்டை சந்தோஷத்தில் ’கே.ஜி.எஃப் 2’ படக்குழு..!

இரட்டை சந்தோஷத்தில் ’கே.ஜி.எஃப் 2’ படக்குழு..!
Published on

 கொரோனா சூழலால் தாமதமான கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 படத்தின் இறுதிக்கட்டப் பட பணிகள் அடுத்தவாரம் தொடங்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற கேங்ஸ்டர் படமான கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகமான ’கே.ஜி.எஃப் 2’ அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகவிருந்தது

இந்நிலையில்,கொரோனாவால் கடந்த மார்ச் 24 ஆம் தேதிமுதல் இந்தியா முழுக்க  ஊரடங்கு அறிவிக்கபட்டதால், இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தடைப்பட்டன.

      தற்போது, பல மாநிலங்களில் அரசு ஊரடங்கு விதிகளைத் தளர்த்தியுள்ளதால் மீண்டும் ஷூட்டிங் செல்ல தயாராகிவிட்டது படக்குழு. இப்படத்தை தயாரித்த கார்த்திக் கவுடா”இன்னும் 24 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியுள்ளது. அக்டோபர் மாதத்திற்கு முன்பே படபிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றிருக்கிறார். கன்னடம், தமிழ், தெலுங்கு,  மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உலகம் முழுக்க வசூலை அள்ளிக்குவித்தது

இப்படத்தில் நடித்தநடிகர் யஷ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிக்கு கே.ஜி.எஃப் அமைந்துள்ள கர்நாடகா மட்டுமல்ல இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களைவிடவும், இப்படத்திற்கு இப்போது எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன. காரணம், படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கும் முதல் படம் ’கே.ஜி.எஃப் 2’ ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்தவாரம்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சஞ்சய் தத். ஆனால், கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.  ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்: சஞ்சய் தத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று படக்குழு டபுள் சந்தோஷத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com