தமிழகத்தில் சாதனைப் படைத்த கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு?

தமிழகத்தில் சாதனைப் படைத்த கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு?

தமிழகத்தில் சாதனைப் படைத்த கே.ஜி.எஃப்-2 முதல் வாரத்தின் வசூல் எவ்வளவு?
Published on

கே.ஜி.எஃப்-2 திரைப்படம் முதல் வார முடிவில் 44 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

யஷ் நடிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எஃப்-2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. தமிழகத்திலும் அந்த திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி தமிழகத்தில் சுமார் 350 திரையரங்குகளில் கே ஜி.எஃப்-2 வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் வருகை அதிகமாக இருந்ததால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது, மற்றும் வழக்கமான கட்சிகளை விட கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டன.  இதனால் முதல் நான்கு நாட்களில் 30 கோடி வசூல் செய்தது.  

இதைத்தொடர்ந்து தற்போது ஏழு நாட்களை உள்ளடக்கிய முதல் வார முடிவில் 44 கோடி ரூபாயை கே.ஜி.எஃப்-2 திரைப்படம் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கன்னட திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை கே.ஜி.எஃப்-2 நிகழ்த்தியிருக்கிறது.  அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ஏழு நாட்களில் 93 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடிகர் சூரி தொடர்ந்த மோசடி வழக்கு: ஓய்வு டிஜிபி, தயாரிப்பாளரை நேரில் விசாரிக்க முடிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com