‘அடிமை இல்ல தலைவன்’ - ‘கே.ஜி.எஃப் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘அடிமை இல்ல தலைவன்’ - ‘கே.ஜி.எஃப் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
‘அடிமை இல்ல தலைவன்’ - ‘கே.ஜி.எஃப் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கே.ஜி.எஃப் படத்தில் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னட திரையுலகில் பிரம்மாண்டமாக உருவாகி வசூல் வேட்டை நடத்திய திரைப்படம் கேஜிஎஃப். இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யஷ் கதாநாயகனாக நடித்தார். ‌‌‌இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனா, ஜப்பான் ஆகிய மொழிகளிலும் வெளியானது. சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கேஜிஎஃப் திரைப்படம் தேசிய விருதுக்கு தேர்வாகியது.

பணக்காரனாக துடிக்கும் ஒரு சிறுவன் கேங்க்ஸ்டராக மாறுவதும், பின்னர் தங்கச்சுரங்கத்தை நிர்வகிக்கும் வில்லனை கொல்வதற்காக அவன் இடத்துக்கே செல்வதும், அங்கு அடிமைப்பட்டு கிடக்கும் மக்களுக்காக வருந்துவதும், அதன் பின் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் என மாஸ் சினிமாவாக உருவாகி இருந்தது கேஜிஎஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்ட கேஜிஎஃப்-ன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே “கேஜிஎஃப் 2” படத்தின் "ஃபர்ஸ்ட் லுக்" டிசம்பர் 21 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில், கதாநாயகன் ‘ராக்கி’, கேஜிஎஃப்-ல் பணிபுரியும் ஆட்களுடன் சேர்ந்து சாய்ந்து கிடந்த இரும்புக் குழாய் ஒன்றை கயிறு கட்டி தூக்கி நிறுத்துகிறார். அந்த புகைப்படத்தை பார்க்கும்போது, ஒரு தலைவன் மக்களை வேலை வாங்காமல் அவர்களுடன் இணைந்து களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. அத்துடன் சாம்ராஜ்ஜியத்தின் மறுகட்டமைப்போம் எனவும் போஸ்டரின் மேல், எழுதப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி போஸ்டரில் ‘ராக்கி’ இருக்கும் கெட் அப், ஏற்கனவே முதல் பாகத்தில் ஒரு காட்சியில் காட்டப்பட்டது தான். அவர் போலீஸ் ஸ்டேஷனில் லைசென்ஸ் இல்லாமல் சிக்குவதும், பின்னர் மூன்று ஹெலிகாப்டரில் அவரது ஆட்கள் வந்து லைசென்ஸ் கொடுப்பதும் என மிரட்டலாக இருக்கும் அந்த காட்சி. அப்போது சிறைக்குள் இருக்கும் கைதிகள் ‘அடிமை இல்ல தலைவன்’ என குரல் எழுப்புவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com