கேஜிஎஃப் 2 இந்தி பதிப்பின் வசூல் ரூ. 300 கோடியை நெருங்கியது!

கேஜிஎஃப் 2 இந்தி பதிப்பின் வசூல் ரூ. 300 கோடியை நெருங்கியது!

கேஜிஎஃப் 2 இந்தி பதிப்பின் வசூல் ரூ. 300 கோடியை நெருங்கியது!
Published on

கேஜிஎஃப்: அத்தியாயம் 2 இந்திப் பதிப்பின் வசூல் இரண்டாவது வார இறுதியில் ரூ. 300 கோடியை நெருங்கி உள்ளது.

“ராக்கி பாய்” ஆக யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த பிரஷாந்த் நீலின் “கேஜிஎஃப்: அத்தியாயம் 2” பாக்ஸ் ஆபிஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம், அதன் இந்திப் பதிப்பு இரண்டாவது வார இறுதியில் ரூ.300 கோடி வசூலை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வசூல் தொகையை விட சில கோடிகள் குறைவாக வசூல் செய்துள்ளது.

தங்கல் படத்தை விட அத்தியாயம் 2 இந்திப் பதிப்பு இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இருப்பினும், படத்தின் தயாரிப்பாளர்களின் அறிக்கையின்படி, படத்தின் மொத்த வியாபாரம் 10 நாட்களில் ரூ 298.44 கோடியாக உள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட ரூ 300 கோடியை விட சற்று குறைவு. இதற்கிடையில், கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகளவில் ரூ 546 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com