கார் விபத்தில் ஹாலிவுட் காமெடி நடிகர் படுகாயம்!
அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில், பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கெவின் ஹர்ட் படுகாயமடைந்தார். அவருடன் சென்ற பிரபல மாடலும் படுகாயமடைந்தார்.
பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் கெவின் ஹர்ட் (Kevin Hart ). இவர், ’டெத் ஆப் டைனாஸ்டி’, ’ஸ்கேரி மூவி’, ’திங் லைக் எ மேன்’, ’தி இஸ் எண்ட்’, ’தி சீக்ரெட் லைஃப் ஆப் பெட்ஸ்’, ’ஜுமான்ஜி’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை இவர்தான் தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அதை தொகுத்து வழங்குவ தில் இருந்து விலகினார்.
இவர், பிரபல மாடல் ரெபெக்காவுடன் நேற்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், தனது பிளைமுத் காரில் சென்றுகொண்டிருந்தார். காரை ஜாரெட் பிளாக் என்பவர் ஓட்டினார். முல்ஹோலந்த் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டில் கவிழ்ந்து உருண்டது. இதையடுத்து கலிபோர்னியா நெடுஞ் சாலை ரோந்து போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கெவின் ஹர்ட்டின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. காரை ஓட்டிய பிளாக் மற் றும் ரெபக்காவும் காயமடைந்துள்ளனர்.