\
'எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு செய்யும் கேரள போலீஸ் - வீடியோ!

'எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு செய்யும் கேரள போலீஸ் - வீடியோ!

'எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு செய்யும் கேரள போலீஸ் - வீடியோ!
Published on

வைரல் ஹிட் அடித்த 'எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு செய்துள்ளனர் கேரள காவல்துறையினர்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இந்தியா முழுக்க வைரல் ஹிட் அடித்த தீ, தெருக்குரல் அறிவு பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மூலம் கேரள காவல்துறையினர் பொதுமக்களை மாஸ்க் அணியச் சொல்லியும் சமூக இடைவெளி கடைபிடிக்கச் சொல்லியும் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com