சினிமா
நடிகர் திலீப் வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி
நடிகர் திலீப் வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் அனுமதி
நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப் வெளிநாடு செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
துபாயில் இம்மாதம் 29ம் தேதி நடைபெறவுள்ள ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்து இருந்தார். வெளிநாடு செல்ல வசதியாக தனது பாஸ்போர்ட்டை வழங்கக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியதுடன் 7 நாட்களுக்குள் பாஸ்போர்ட்டை தரவும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திலீப்புக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.