சிறையில் கொசு தொல்லை - தூங்கமுடியாமல் நடிகர் திலீப் அவதி
நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப், சிறையில் உப்புமா சாப்பிடுவதாகவும், கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளா முழுவதும் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதால், நடிகர் திலீப்பும் சிறையில் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருவதாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இரவில் அவர் உறங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சக கைதி ஒருவர், நடிகர் திலீப்புக்கு கொசு வர்த்தி ஏற்றி வைத்து, அவர் உறங்குவதற்கு உதவி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அசைவ பிரியரான திலீப் சிறையில் உப்புமா மற்றும் வாழைப்பழம் போன்ற சாதாரண உணவுகளையே உண்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடைய ஜாமீன் கோரி மீண்டும் திலீப் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.