கீர்த்தி சுரேஷூக்கு பிரியா விடை கொடுத்த சூர்யா

கீர்த்தி சுரேஷூக்கு பிரியா விடை கொடுத்த சூர்யா

கீர்த்தி சுரேஷூக்கு பிரியா விடை கொடுத்த சூர்யா
Published on

கீர்த்தி சுரேஷூக்கு பிரியா விடை கொடுத்தது தானா சேர்ந்த கூட்டம் படக்குழு.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. வெளியான சற்று நேரத்தில் ட்விட்டரில் டீசர் டிரெண்ட் ஆனது. அந்தப் படத்தின் டீசர் நன்றாக இருந்ததாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். டீசரை பார்த்தும் தெரிந்துவிட்டது. இந்தப்படம் பெரிய வெற்றி என குறிப்பிட்டிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்திருந்த சூர்யா முதல் வாழ்த்து உங்களுடையதுதான். தொலைபேசியில் வாழ்த்தியதற்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் பகுதி முழுவதுமாக படமாக்கப்பட்டு விட்டதால் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பியது படக்குழு. சூர்யா, இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் கீர்த்தி எடுத்து கொண்ட செல்ஃபியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் பொங்கலுக்கு வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com