\
பட்டு வேஷ்டி சில்க் சட்டையுடன் நாய்க்குட்டிகள்..கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஓணம் புகைப்படம்

பட்டு வேஷ்டி சில்க் சட்டையுடன் நாய்க்குட்டிகள்..கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஓணம் புகைப்படம்

பட்டு வேஷ்டி சில்க் சட்டையுடன் நாய்க்குட்டிகள்..கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஓணம் புகைப்படம்
Published on

வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஓணம் விழா கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு, சமூகவலைதளத்தில் மற்ற நடிகைகளைப் போலவே ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள படங்களுக்கு "முதலில் குடும்பம்" என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். அதில் அவரது பாட்டி சரோஜாவும் இருக்கிறார். அவர் 'தாதா 87' படத்தில் சாருஹாசனுடன் சேர்ந்து நடித்தவர்.

தலை வாழை இலையில் பரிமாறப்பட்ட ஓணம் சிறப்பு விருந்தின் படங்களுக்கு "அடுத்து உணவு..." என்று பதிவிட்டுள்ளார். அடுத்து அனைவரையும் கவரக்கூடிய ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் வளர்க்கும் நாய்க்குட்டிகள் பட்டு வேஷ்டியும் சில்க் சட்டையும் அணிந்து குதூகலத்துடன் காட்சி தருகின்றன.

"என் நாய்க்குட்டிகளிடம் இருந்தும் என்னிடமிருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஓணம்..." என்றும் குறிப்பிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள மூன்று ஓணம் பதிவுகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com