’உங்களை சந்திச்சதுல...’ கீர்த்தி நெகிழ்ச்சி, வித்யா மகிழ்ச்சி!
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும் நடிக்கிறார். ’மரக்கார்: அரபிகடலிண்டே சிம்மம்’ என்ற அந்தப் படத்தில் மோகன்லால் ஹீரோ. சுனில் ஷெட்டி, அர்ஜூன், சுதீப், பிரபுதேவா, மஞ்சு வாரியர் என ஏகப்ப ட்ட நட்சத்திர பட்டாளங்கள். 16 ஆம் நூற்றாண்டு கதையான இதில் முக்கிய கேரக்டர் கீர்த்திக்கு.
இதற்கிடையே சமீபத்தில் ஆந்திராவில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார் கீர்த்தி. ’நடிகையர் திலகம்’ (மகாநடி) படத்தில் சாவித் திரியாக வாழ்ந்ததற்காக, சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது அவருக்கு.
விழாவில், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, விஷால், பூஜா ஹெக்டே, குஷ்பு, வித்யா பாலன், அதிதி ராவ், ராஷி கண்ணா, தமன் என ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம். விருது வாங்கிய நடிகைகள் எல்லோரும் குரூப் குரூப்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆனால், கீரித்தி விரும்பி புகைப்படம் எடுத்தது வித்யா பாலனுடன்! ‘’உங்களை மீட் பண்ணுனதுல உண்மையிலயே ரொம்ப சந்தோஷமா யிருக்கேன்’’ என்று சொல்லி ரசிகை மனநிலைக்குச் சென்றாராம் கீர்த்தி!
அவருடன் எடுத்த புகைப்படங்களை ஆசையாக, ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்!