\
"ஒருமுறை நீங்களும் செய்யவேண்டும்" -சூர்ய நமஸ்காரம் பற்றி கீர்த்தி சுரேஷ்

"ஒருமுறை நீங்களும் செய்யவேண்டும்" -சூர்ய நமஸ்காரம் பற்றி கீர்த்தி சுரேஷ்

"ஒருமுறை நீங்களும் செய்யவேண்டும்" -சூர்ய நமஸ்காரம் பற்றி கீர்த்தி சுரேஷ்
Published on

கொரோனா வந்தாலும் வந்தது பிரபலங்கள் பலருக்கும் நிறையவே நேரம் கிடைத்துவிட்டது. வேலை பரபரப்பு இல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், உடற்பயிற்சி, இசை, தோட்டம் வளர்த்தல், யோகா என அவரவர் விருப்பத்திற்கேற்ப நேத்தைச் செலவிட்டு வருகின்றனர். கீர்த்தி சுரேஷ், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்ய நமஸ்காரம் பற்றி சிலாகித்துப் பதிவிட்டுள்ளார். கூடவே சிறு காணொலி ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

"ஒரு நாளை 150 சூர்ய நமஸ்காரங்களுடன் தொடங்குவதற்கு இணையாக வேறு எதுவுமில்லை. அடுத்து 200க்கான முயற்சி. இது எவ்வளவு மிதமான மற்றும் புத்துணர்வை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்த முடியாது. உங்கள் எல்லா சக்கரங்களையும் உற்சாகப்படுத்துகிறது. உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனை நீங்கள் ஒருமுறை செய்து பாருங்கள். என்னவென்று உணர்வீர்கள்" என்று சூர்ய நமஸ்காரம் பற்றி பாடமே எடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மகாநதி, சர்க்கார், பென்குயின் படங்களுக்குப் பிறகு தற்போது சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்தே, மிஸ் இந்தியா படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் ஊரடங்குக்குப் பிறகு படப்படிப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com