நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
‘பைரவா’படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் ‘தளபதி62’இல் சேர்ந்து நடிக்கிறார். இதனை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை இன்று சென்னையில் தொடங்கியது. அதனை அடுத்து விஜய் க்ளாப் அடித்து படப்பிடிப்பினை தொடங்கி வைத்தார். இப்படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டார், அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருன்றன. இந்தப் படத்தின் பூஜை செய்தி வெளியானது முதலே ட்விட்டர் ட்ரெண்டில் விஜய்யின் ‘தளபதி62’ முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், “இனிமையான தொடக்கம் ‘தளபதி62’. விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன் என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி.அதற்காக விஜய்க்கு முதல் நன்றி. அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய சன் பிக்சருக்கும் நன்றி” என்று தெரிவித்துளார்.