“இது சர்கார் தீபாவளி... போட்றா வெடிய”- கீர்த்தி சுரேஷ் குஷி

“இது சர்கார் தீபாவளி... போட்றா வெடிய”- கீர்த்தி சுரேஷ் குஷி
“இது சர்கார் தீபாவளி... போட்றா வெடிய”-  கீர்த்தி சுரேஷ் குஷி

வரப்போகும் தீபாவளி ‘சர்கார்’ தீபாவளி என மகிழ்ச்சி பொங்க நடிகை கீர்த்தி சுரேஷ் பேசினார்.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “நானும் உங்களை போல தளபதி விஜய்யை திரையில் ரசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அவருடன் இணைந்தே இரண்டு படங்களில் நடித்துவிட்டேன் என்பது மகிழ்ச்சி. இப்போது கூட தியேட்டருக்கு போகும்போது தளபதியை திரையில் பார்த்தால் கைதட்டுவேன். முதலில் விஜய்யை திரையில் பார்த்துதான் அடிமையாகி இருந்தேன். ஆனால் இரண்டு படங்கள் அவருடன் நடித்த காலத்தில் அவருடைய மனசு.. டவுண்ட் டு எர்த் குணம் போன்றவற்றை பார்த்திருக்கிறேன்.. அப்பப்பா..

நான் முதன்முதலில்‘போக்கிரி’ 100-வது நாளில் கேரளாவில் வைத்துதான் விஜய்யை பார்த்தேன். செல்ஃபி எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் அவரை தனியாக ஒரு புகைப்படம் மட்டும் எடுத்தேன். அப்போது மட்டும் அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்திருந்தால் அது பொக்கிஷமாகவே அமைந்திருக்கும்” எனப்  பேசினார். உடனே அருகில் நின்ற தொகுப்பாளர்கள் அதுதான் இரண்டு படம் விஜய்யுடன் நடிச்சாச்சே.. அதுவும் பொக்கிஷம்தான் என்று கீர்த்தியின் மனசை தேற்றினர். மேலும் பேசிய கீர்த்தி சுரேஷ், வரப்போகும் தீபாவளி ‘சர்கார்’ தீபாவளி, அடிடா மேளத்த.. போட்றா வெடிய என குஷியாக பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com