\
கீர்த்தி சுரேஷை காண கூடிய ரசிகர்கள்: ஸ்தம்பித்தது போக்குவரத்து

கீர்த்தி சுரேஷை காண கூடிய ரசிகர்கள்: ஸ்தம்பித்தது போக்குவரத்து

கீர்த்தி சுரேஷை காண கூடிய ரசிகர்கள்: ஸ்தம்பித்தது போக்குவரத்து
Published on

சே‌லத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண ரசிகர்கள் அதிக அளவில் திரண்டதால், போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நகைக்கடை திறப்பு விழா‌வுக்கு வந்திருந்த கீர்த்தி சுரேஷைக்காண, ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது பலர், சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளைத் தாண்டியும், ஒருவரை ஒருவர்‌ தள்ளியபடியும் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் அவர்களை விரட்டினர். இதனால் புதிய பேருந்து நிலையம் முதல் 5 சாலை வரை செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com