kazan khanTwitter
சினிமா
பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் மரணம்!
மலையாள சினிமாவின் விருப்பமான வில்லனாக வலம் வந்த பழமையான நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் கந்தர்வம், சிஐடி மூசா, தி கிங், வர்ணபகிட்டு போன்ற படங்களிலும், தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ், மேட்டுக்குடி, முறை மாமன், பிரியமானவளே உள்ளிட்ட 50 படங்கள் மூலம் எல்லோருடைய விருப்பமான நடிகராக வலம்வந்தார்.