\
சிறந்த நடிகை விருதுக்கு காவ்யா பெயர் பரிந்துரை

சிறந்த நடிகை விருதுக்கு காவ்யா பெயர் பரிந்துரை

சிறந்த நடிகை விருதுக்கு காவ்யா பெயர் பரிந்துரை
Published on

மெல்போர்னில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்‍கான விருதுக்‍கு காவ்யா மாதவன் பெயர் பரிந்துரைக்‍கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒவ்வொரு வருடமும் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு காவ்யா மாதவனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்‍கத்தில் திலீப்- காவ்யா மாதவன் நடித்த படம் ’பின்னேயும்’. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும், அலியா பட், வித்யா பாலன் ஆகிய நடிகைகளும் போட்டியில் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்தப் பட விழா நடைபெறவுள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com