நடிகர் திலீப்- நடிகை காவ்யா மாதவன் தம்பியின் மகளுக்கு பெயர் சூட்டும் விழா சமீபத்தில் நடைபெறுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி, திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்த னர்.
காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார்.
விவாகரத்து பெற்ற திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கி பழகி வந்தனர். அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி ’எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன்’ என்று திலீப் கூறியிருந்தார். அதன்படி 2016ஆம் ஆண்டு காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமானார். அவருக்கு கடந்த மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி முகநூலில் பதிவிட்ட திலீப், ’எனது மகள் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளார். குழந்தையும் காவ்யாவும் நலமாக உள்ளனர். உங்களின் ஆசியும் வாழ்த்துக ளும் எங்களுக்குத் தேவை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இத்தகவலை காவ்யாவின் மேக்கப்மேன் உன்னி சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு மகாலாட்சுமி என்ற பெயரை திலீப் மூத்த மகள் மீனாட்சி பரிந்துரை செய்ததாகவும் அதன்படி அந்த பெயரையே சூட்டியுள்ள தாகவும் கூறப்படுகிறது.