நடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை!

நடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை!
நடிகர் திலீப்- காவ்யா தம்பதிக்கு பெண் குழந்தை!

நடிகர் திலீப்- காவ்யா மாதவன் தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் திலீப். இவர், சக நடிகை மஞ்சு வாரியரை காதலித்து 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் மீனாட்சி என்ற மகள் உள்ளார். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மகள் மீனாட்சி, திலீப்புடன் உள்ளார். இவர்கள் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை இருவரும் மறுத்தனர்.

காவ்யா மாதவன் கடந்த 2010-ல் தொழில் அதிபர் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து துபாய் சென்ற காவ்யா மாதவன், சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்து கேரளா வந்துவிட்டார். 

விவாகரத்து பெற்ற திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கி பழகி வந்தனர். அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி எனது மகளின் முடிவை பொறுத்தே நான் மறுமணம் செய்வேன் என்று திலீப் கூறியிருந்தார். அதன்படி 2016ஆம் ஆண்டு காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தார். இந்த வழக்கில் காவ்யா மாதவனுக்கும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் காவ்யா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு இன்று காலை 4.45 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக திலீப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி முகநூலில் பதிவிட்டுள்ள திலீப், ’எனது மகள் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளார். குழந்தையும் காவ்யாவும் நலமாக உள்ளனர். உங்களின் ஆசியும் வாழ்த்துகளும் எங்களுக்குத் தேவை’ என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு ஏராளமானோர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com