\
'மொபைல்களை பயன்படுத்தாதீர்!' - வைரலாகும் விக்கி கௌஷல் - கத்ரீனா திருமண அழைப்பிதழ்

'மொபைல்களை பயன்படுத்தாதீர்!' - வைரலாகும் விக்கி கௌஷல் - கத்ரீனா திருமண அழைப்பிதழ்

'மொபைல்களை பயன்படுத்தாதீர்!' - வைரலாகும் விக்கி கௌஷல் - கத்ரீனா திருமண அழைப்பிதழ்
Published on: 

சமூக வலைதளங்களில் விக்கிகௌஷல் - கத்ரீனா கைஃப் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் திருமணம் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாகவே இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவர்களின் திருமணத்தில் ஏராளமான பாலிவுட் நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்தில் விருந்தினர்களுக்கு ராஜ மரியாதை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர்களின் திருமண அழைப்பிதழில், ''ஜெய்ப்பூரில் இருந்து ரன்தம்போருக்குச் செல்லும் சாலைப் பயணத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறோம். இயற்கை எழில் சூழ்ந்த கிராமங்கள் மற்றும் சாலைகள் வழியாக உங்கள் பயணத்தை அனுபவிக்கவும். வேடிக்கையான, அற்புதமான மகிழ்ச்சியான நிகழ்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள். தயவு செய்து உங்கள் மொபைல் போன்களை உங்களுக்கான அறைகளில் வைத்துவிடுங்கள். இந்த நிகழ்வுகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை தவிர்த்துக்கொள்ளவும். உங்களை காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் திருமணத்தில் 120 டாப் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். திருமணம் நடக்கும் இடத்தைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com