\
விஜய் சேதுபதி படத்தில் கத்ரீனா கைஃப் - டைட்டிலுடன் வெளியானது அறிவிப்பு

விஜய் சேதுபதி படத்தில் கத்ரீனா கைஃப் - டைட்டிலுடன் வெளியானது அறிவிப்பு

விஜய் சேதுபதி படத்தில் கத்ரீனா கைஃப் - டைட்டிலுடன் வெளியானது அறிவிப்பு
Published on

ஹிந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் புதியப்படத்தில் பிரபல நாயகி கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்கிறார். 

‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஜய்சேதுபதி பீட்சா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும், சீதக்காதி, விக்ரம் வேதா, பேட்ட உள்ளிட்ட பலப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். அண்மையில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்திலும், தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ படத்திலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார். அதிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி ஹிந்தியில் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல நாயகி கத்ரீனா கைஃப் நடிக்கும் இந்தப் படத்தை ஹிந்தியில்  ‘அந்தாதுன்’ படத்தை இயக்கி பிரலமான ஸ்ரீராம்ராகவன் இயக்க உள்ளார்.

முழுக்க முழுக்க த்ரில்லர் ஜானரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப்படம் புனேவை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. 30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் படத்தின் மொத்த நீளம் 90 நிமிடங்கள்தான். படத்திற்கு இடைவேளை கிடையாது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com