\
ஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா!

ஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா!

ஆமிர்கான், கேத்ரினாவுக்கு டான்ஸ் வாத்தியாரான பிரபுதேவா!
Published on

இந்தி நடிகர் ஆமிர்கான், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு பிரபுதேவா நடனம் கற்றுக்கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆமிர்கான், கேத்ரினா கைப் ஜோடியாக நடிக்கும் இந்தி படம், ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’.  இதில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக இருவரும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கும் இந்தப் படத்துக்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் மகன். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் இடம்பெறும் பாடல் ஒன்றுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். அதற்கான நடன பயிற்சி மும்பை ஸ்டூடியோ ஒன்றில் சமீபத்தில் நடந்தது. அப்போது பிரபுதேவா மற்றும் கேத்ரினாவுடன்  ஆமிர்கான் செல்பி புகைப்படம் எடுத்தார். இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com