\
இமயமலையில் 85 வயது டைட்டானிக் ரசிகர் - உணர்ச்சிப்பெருக்கில் அழுத டைட்டானிக் நாயகி

இமயமலையில் 85 வயது டைட்டானிக் ரசிகர் - உணர்ச்சிப்பெருக்கில் அழுத டைட்டானிக் நாயகி

இமயமலையில் 85 வயது டைட்டானிக் ரசிகர் - உணர்ச்சிப்பெருக்கில் அழுத டைட்டானிக் நாயகி
Published on

டைட்டானிக் நாயகி இந்தியப் பயணத்தின்போது ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஆங்கிலத் திரைப்படங்களை அதிகம் விரும்பாதவர்கள் கூட டைட்டானிக் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். 1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதில் நடித்த நாயகியான கேட் வின்ஸ்லெட்டும், நடிகர் டிகாப்ரியோவும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தனர். இப்படி பல கோடி ரசிகர்களை பெற்ற டைட்டானிக் குறித்து நடிகை கேட் வின்ஸ்லெட் மனம் திறந்து பேசியுள்ளார். தன்னுடைய இந்தியப் பயணத்தின் போது ஏற்பட்ட நெகிழ்ச்சி சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், டைட்டானிக் திரைப்படம் எங்கு பார்த்தாலும் பரவி இருந்தது. அப்படம் வெளியாகி சில வருடங்கள் கழித்து நான் இந்தியாவின் இமயமலைப் பகுதியில் முதுகில் பைகளை மாட்டிக்கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அப்போது 85வயது மதிக்கத்தக்க முதியவர் கைத்தடியை ஊன்றிகொண்டே என்னிடம் வந்தார். அவருக்கு ஒரு கண் சரியாக தெரியவும் இல்லை.

என்னைப் பார்த்த அவர், '' நீ... டைட்டானிக்'' என்று கூறினார். நான் 'ஆமாம்' என்று தலையாட்டினேன். அவர் தனது கைகளை அவரது இதயப்பகுதியில் வைத்துக்கொண்டு 'நன்றி' எனச் சொன்னார். நான் உணர்ச்சிப்பெருக்கில் அழுது விட்டேன். அந்தப்படம் எவ்வளவு மக்களை எனக்கு கொடுத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com