’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை!

’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை!
’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை!

பிக்பாஸ் வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்ட நடிகைகள் கஸ்தூரியும் வனிதாவும்  தொடர்ந்து ட்விட்டர் போரில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனியார் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்போது, நடிகை கஸ்தூரி, நடிகை வனிதா விஜயகுமாரை, வாத்து என்று கூறியிருந்தார். இது இருவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறிவிட்டாலும் பிரச்னை மட்டும் தீரவில்லை. சமூக வலைத்தளங்களில் இவர்களின் வார்த்தைப் போர் வெடித்து வருகிறது.

இந்நிலையில், லாஸ்லியாவுக்கு ஆதரவாக ட்வீட் பதிவிட்ட வனிதாவுக்கு, ‘என்ன தான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாகப் பழி போடுவது? விட்டுருங்கம்மா’ என்று கூறிய கஸ்தூரி, வாத்து எமோஜியையும் சேர்த்திருந்தார்.

கஸ்தூரியின் இந்த ட்வீட்டை ஒருவர் வனிதாவுக்கு டேக் செய்து, பதிலடி கொடுக்குமாறு கேட்டிருந்தார். உடனே, ‘உனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் உன்னைப் பற்றி விவரிக்க இணையத்தில் ஒரு எமோஜி கூட இல்லை. அதனால் இதை வெற்றிடமாக விடுகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு கஸ்தூரி, ‘அன்பான வனிதா. உன்னை போல் வார்த்தைகளைப் பயன்படுத்த இந்த இணையத்தாலேயே முடியவில்லை. இந்த வார்த்தை போரில் ஜெயித்துவிட்டதாக நினைத்து உனக்காக நீயே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்’ என்று பதிலளித்தார். 

இவர்களின் ட்விட்டர் போர் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. அவர்கள் மேலும் வனிதாவை கிளற, கடுப்பான அவர், ‘’ இதற்கு மேல் பிக்பாஸ் 3 தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. நான் செய்தது எல்லாம் பொய்யான நாடகம். இது ஒரு கேம் ஷோ மட்டுமே. இதில் நீங்கள் அதிகமாக ஈடுபட்டு மண்டையை உடைத்துக்கொள்கிறீர்கள். இனி, யாரும் யாருடனும் இணையட்டும் அல்லது பிரிந்து கொள்ளட்டும். எனக்கு போலி இல்லாத உண்மையான வாழ்க்கை இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, இதைதான் வனிதாவிடம் சொன்னேன். ‘இது ஒரு கேம் ஷோ, ஏன் தேவையில்லாத சண்டை, கோபம்?’ என்று அவரிடம் கெஞ்சியது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனால், ’இது ரியாலிட்டி ஷோ’ என்று கத்தினார். இப்போது போலி நாடகமா?” என்று பதிவிட்டிருந்தார்.

உடனே வனிதா, ‘’கடவுளே, இதை நிறுத்த மாட்டீயா கஸ்தூரி? உன்னை மகிழ்விக்க நீ பிக்பாஸ் 3-க்கு வந்தாய். நான் பார்வையாளர்களை மகிழ்விக்க அங்கு வந்தேன். இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது நாடகத்தனமான கேம் ஷோ. பொழுதுபோக்குக்காக இதை அனைவரும் பார்க்கிறார்கள்’’ என்று கூறினார். 

இதற்கு கஸ்தூரி, ‘’மன்னிக்கவும் வனிதா, பொழுதுபோக்கு என்றால் என்ன என்பது பற்றி உன்னிடம் வக்ரமான யோசனை இருக்கிறது. உனது படத்தில் இந்த தீர்ப்பை காண்பிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் என்னை மகிழ் விப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மற்றவர்களின் விவகாரத்தில் எனக்கு குழப்பம் இல்லை’ என்று பதில் ட்விட் செய்திருந்தார்.

இந்த மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்றுகொண்டிருந்ததால், ரசிகர்களும் ’நீங்க சொல்வது சரி, அவங்க சொல்வது தவறு’ என்ற ரீதியில் இருவரையும் உசுப்பிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வனிதா, ’வாயை மூடு, பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோதும் சரி, வெளியிலும் சரி, உனக்கு அறிவே கிடையாது. நல்ல விளைவுகளுக்காக நான் உன்னை பிளாக் பண்ணுகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com