போர், போர் என்று போர் அடிக்கிறது: ரஜினியை விமர்சித்த நடிகை கஸ்தூரி

போர், போர் என்று போர் அடிக்கிறது: ரஜினியை விமர்சித்த நடிகை கஸ்தூரி
போர், போர் என்று போர் அடிக்கிறது: ரஜினியை விமர்சித்த நடிகை கஸ்தூரி

போர், போர் என்று போர் அடிக்கிறது என்று நடிகை கஸ்தூரி, ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். கடைசிநாளில் ரசிகர்களிடம் ரஜினி, போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், என்று அரசியல் பிரவேசம் குறித்து கூறினார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு, அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் விமர்சித்து உள்ளனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது அக்கப்போர் என விமர்சித்துள்ளார்.

இதுசம்பந்தமாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,’போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது. நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினி மீது கஸ்தூரி தெரிவித்துள்ள இக்கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நீ எல்லாம் தலைவர் பத்தி பேசுர பாரு நேரம்டி என்று, ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, நீ பொறக்குறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் அவரு ரசிகைடா உன்னை மாதிரி மரியாதைக்கெட்ட ரசிகர்களால் அவருக்கு அவமானம்தான். ரஜினி சார் உலகம் முழுவதும் பலகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார். அவரை சினிமா துறையில் இருந்துகொண்டே விமர்சனம் செய்றீங்களே எவ்வளவு கேவலம், என்று மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் ட்விட் செய்த கஸ்தூரி, ‘நான் அதிதீவிர ரஜினி ரசிகை. இப்போ பேசினது விமர்சனம் இல்ல. விரக்தி. எல்லார் மனசுலயும் இருக்கற ஆதங்கத்தைதான் சொல்லியிருக்கேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com