சினிமா
மாஸ்டர்: அதிக ரசிகர்களை அனுமதித்த சென்னை காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம்!
மாஸ்டர்: அதிக ரசிகர்களை அனுமதித்த சென்னை காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம்!
தியேட்டர்களில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை மீறியதற்காக சென்னை - காசி தியேட்டருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி தியேட்டருக்கு மாஸ்டர் படத்துக்கு அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்ததாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, கொரோனாவை பரப்பும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விதிமீறும் தியேட்டர்கள் மீது வெறும் 5000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். திரையரங்குகளை முழுமையாக நிரப்பிக் கொண்டு, மிகக் குறைந்த அபராதத்தை செலுத்தும் போக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.