சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர்: நடிகர் சங்கம் தீர்மானம்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர்: நடிகர் சங்கம் தீர்மானம்

சிவாஜி சிலையில் கருணாநிதி பெயர்: நடிகர் சங்கம் தீர்மானம்
Published on

சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலை கல்வெட்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரையும் பொறிக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் 64ஆவது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலை கல்வெட்டில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரையும் பொறிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அப்போது பேசிய நாசர், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்று கூடினால் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்களான நடிகைகள் காஞ்சனா மற்றும் ஷீலா ஆகியோருக்கு நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி முதலமைச்சருடன் வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்க உள்ளதாக நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் செயலாளர் விஷால் புதிய தலைமுறையிடம் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com