\
’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு!

’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு!

’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு!
Published on

ஜிகர்தண்டா இந்தி ரீமேக்கில் சித்தார்த் கேரக்டரில் கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபிசிம்ஹா உள்பட பலர் நடித்த படம் 'ஜிகர்தண்டா'. இதில் சிறப்பாக நடித்த பாபிசிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. 

நிஷிகாந்த் காமத் இயக்கும் இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் சஞ்சய் தத்தும், லட்சுமி மேனன் கேரக்டரில் தமன்னாவும் நடிக்கின்றனர். சித்தார்த் கேரக்டரில் நடிக்க பலர் ஹீரோக்கள் முடிவு செய்யப்பட்டிருந்தனர். கடைசியாக பர்ஹான் அக்தர் நடிப்பதாகக் கூறப்பட்டது. இப்போது அவரும் விலக, கார்த்திக் ஆர்யன் நடிக்கிறார். 

நடிகர் அஜய்தேவ்கன் படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கும் நிஷிகாந்த் காமத், தமிழில் சீமான் நடித்த ’எவனோ ஒருவன்’ படத்தை இயக்கியவர். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com