“குற்றம் செய்யாதவருக்கு 30 ஆண்டு சிறையா? பேரறிவாளனை விடுவியுங்கள்” - கார்த்திக் சுப்பராஜ்

“குற்றம் செய்யாதவருக்கு 30 ஆண்டு சிறையா? பேரறிவாளனை விடுவியுங்கள்” - கார்த்திக் சுப்பராஜ்
“குற்றம் செய்யாதவருக்கு 30 ஆண்டு சிறையா? பேரறிவாளனை விடுவியுங்கள்” - கார்த்திக் சுப்பராஜ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ் திரையுலகினர் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘’ஒரு குற்றமும் செய்யாத மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை.. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம். இவர்களுக்கு தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்’’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com