\
கார்த்திக் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம்: நந்தினி

கார்த்திக் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம்: நந்தினி

கார்த்திக் தற்கொலைக்கு கடன் தொல்லையே காரணம்: நந்தினி
Published on: 

கடன் தொல்லை காரணமாக கார்த்திக் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனையியும், சின்னத்திரை நடிகையுமான நந்தினி தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவரும் நடிகை நந்தினி, டி.வி தொடர்கள், திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். நந்தினிக்கும் தியாகராய நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே, விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றிரவு விஷம் அரு‌ந்தி உயிரிழந்த நிலையில் கார்த்திக் கண்டெடுக்கப்பட்டார்.

மனைவி நந்தினி விவாகரத்துகோரி தொல்லை கொடுத்ததே கார்த்திக்கின் தற்கொலைக்கு காரணம் என, அவரது சகோதரி ரம்யா கூறியிருந்தார் மேலும், தனது இறப்புக்கு காரணம் மனைவி நந்தினியின் தந்தையே என்று கார்த்திக் தனது இறுதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடிகை நந்தினி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கார்த்திக்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்றதாகவும், அவரது இறப்பிற்கு கடன் தொல்லையே காரணம் என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com