சாட்டையும் கையுமாக நிற்கும் கார்த்தி - வெளியானது சுல்தான் படத்தின் போஸ்டர்
கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சாட்டை கையுமாக கார்த்தி விரைப்பாக நிற்கும் தொனி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொன்னம்பலம், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது.

