‘யார்ரா இது தீயா வந்து நிக்குறான்’ - ‘விருமன்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்

‘யார்ரா இது தீயா வந்து நிக்குறான்’ - ‘விருமன்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்
‘யார்ரா இது தீயா வந்து நிக்குறான்’ - ‘விருமன்’ பட ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் ஷங்கர்

கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஷங்கர் மதுரையில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், சூரி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையடுத்து இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குநரும், அதிதி ஷங்கரின் தந்தையுமான ஷங்கர் கலந்துகொண்டு, படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.

முன்னதாக ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன்பாக பேசிய இயக்குநர் ஷங்கர், எனது மகளுக்கு வாய்ப்பு அளித்த சூர்யா, ஜோதிகா, கார்த்தி, 2டி எண்டெர்டெயின்மெண்ட் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை எனக்கு தெரியாது. ஆனால் சூர்யாவின் 2டி தயாரிக்கிறது என்றவுடன் சரி சொல்லிவிட்டேன். இந்த நேரத்தில் தேசிய விருது வென்ற சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். 

எனது மகளை பற்றி நான் பேசினால் அது நன்றாக இருக்காது. எனினும் ஒருவரியில் சொல்லவேண்டுமானால் நல்ல எண்டெர்டெயினர் எனது மகள். இந்த தலைமுறையினர் தெளிவாக இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் அறிவுரை சொல்ல தேவையில்லை. சொன்னாலும் பிடிக்காது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com