கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி எப்போது? - ரசிகர்கள் ஏமாற்றம்

கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி எப்போது? - ரசிகர்கள் ஏமாற்றம்

கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி எப்போது? - ரசிகர்கள் ஏமாற்றம்
Published on

நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ பட முதல் காட்சி, திரையரங்குகளில் காலை 4 மணிக்குப் பதிலாக, 7 மணிக்குத் தான் ஆரம்பமாகும் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘விருமன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் ஆகியவை ஹிட் அடித்துள்ளநிலையில், பெரும் எதிர்பாப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னணி நடிகர்கள் படங்கள் என்றாலே முதல் காட்சி காலை 4 மணிக்கே திரையரங்குகளில் வெளியாகும். இதற்காக இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் நடிகர்களின் கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் எல்லாம் செய்து கொண்டாடி தீர்ப்பர். ஆனால் கார்த்தியின் ‘விருமன்’ படம் காலை 7 மணிக்குத் தான் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருந்தாலும், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவே கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com