‘அடியாள் வேலையைதானே நாம பார்க்குறோம்’ காவல்துறையை சீண்டும் கார்த்தி பஞ்ச்

‘அடியாள் வேலையைதானே நாம பார்க்குறோம்’ காவல்துறையை சீண்டும் கார்த்தி பஞ்ச்

‘அடியாள் வேலையைதானே நாம பார்க்குறோம்’ காவல்துறையை சீண்டும் கார்த்தி பஞ்ச்
Published on

 சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

டிரைலரில் மணலுக்கு புதைந்து அதில் இருந்து கார்த்தி வெளியேறும் காட்சி மிரட்டலாக இருக்கிறது. வடமாநில பின்னணியில் உருவாகியுள்ள ஒவ்வொரு காட்சிக்குப் பின்பும் பெரிய உழைப்பு ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
டீசரில் கார்த்தி, ‘பவர்ல இருக்குறவங்க உயிருக்கு கொடுக்குற மரியாதையை நாம ஏன் சார் பப்ளிக் உயிருக்கு கொடுக்க மாட்டேங்குறோம்?’ என கேட்கும் வசனமும் ‘கெட்டவங்கள்கிட்ட இருந்து நல்லவங்களை காப்பாத்துற போலீஸ் வேலையை விட்டுவிட்டு நல்லவங்க கிட்ட இருந்து கெட்டவங்களை காப்பாத்துற அடியாள் வேலைதானே சார் நாம பார்த்துக்கிட்டு இருக்கோம்’ என பேசும் வசனமும் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com