\
கார்த்தியின் ’தேவ்’ ஆக்‌ஷன் ஐதராபாத்தில் ஆரம்பம்!

கார்த்தியின் ’தேவ்’ ஆக்‌ஷன் ஐதராபாத்தில் ஆரம்பம்!

கார்த்தியின் ’தேவ்’ ஆக்‌ஷன் ஐதராபாத்தில் ஆரம்பம்!
Published on

கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது ஐதராபாத்தில். இங்கு ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன.

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயின். மற்றும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னே ஷ், வம்சி ரவி, நவரச நாயகன் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இப்போது, இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது ஆக்‌ஷன் காட்சிகளின் ஷூட்டிங். ஆக்‌ஷன் காட்சியில் ரகுலும் நடிக்கிறாராம். கார் சேஸிங் மற்றும் பாடல் காட்சிகளும் இங்கு எடுக்கப்பட இருக்கிறது. இதையடுத்து மும்பை, ஐரோப்பா, அமெரிக்காவிலும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகச் சொல்கிறது படக்குழு. படத்துக்கான பட்ஜெட் 55 கோடி!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com