\
இரும்புத்திரை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி - ஆரம்பமானது பாடல் பதிவு

இரும்புத்திரை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி - ஆரம்பமானது பாடல் பதிவு

இரும்புத்திரை இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி - ஆரம்பமானது பாடல் பதிவு
Published on

“இரும்புத்திரை” இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார்.

விஷாலின் “இரும்புத்திரை” சிவகார்த்திகேயனின் “ஹீரோ” ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இவர் நடிகர் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு “நானும் ரெளடிதான்”, “தெறி” உள்ளிட்டப் படங்களில்  ஒளிப்பதிவாளராக  பணியாற்றிய ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிரடி மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் தயாரிக்கிறார். ரூபன் படத்தொகுப்பாளாராக பணியாற்றும் இப்படத்தின் கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். தீபாவளி பண்டிகையான இன்று இப்படத்தின் பாடல் பதிவு ஆரம்பமானது. அண்மையில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர்  வெளியானது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொடர்பு - ஜான்சன் 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com